Page Loader
அஜித்தின் AK62 முதல் விக்ரமின் தங்கலான் வரை: நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல்
படங்களை வாங்கி குவிக்கும் நெட்பிளிக்ஸ்

அஜித்தின் AK62 முதல் விக்ரமின் தங்கலான் வரை: நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 18, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரின் அடுத்த படமான AK 62 படம் உட்பட ஏராளமான படங்களின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ். நெட்பிளிக்சின், ஒரு பிரிவான நெட்பிளிக்ஸ் இந்தியா சவுத், தென்னிந்தியாவின் படங்களுக்கென்ற பிரத்யேக சமூக வலைத்தளம் ஆகும். அந்த வலைத்தளத்தில் வெளியிடபட்ட அறிவுப்புகளின் படி, #NetflixPandigai என்று பெயரிடப்பட்ட தொடரில், கிட்டத்தட்ட 18 தமிழ் படங்களின் உரிமையை வாங்கியுள்ளது. இதில் பல படங்கள் இன்னும் திரைக்கு வரவே இல்லை. சில திரைப்படங்கள் இன்னும் படப்பிடிப்பையே துவங்க வில்லை. உதாரணமாக அஜித் குமாரின் அடுத்த படமான AK 62 . நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள படங்களின் பட்டியல்: தங்கலான்: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ப.ரஞ்சித் இயக்குகிறார். பார்வதி நாயகியாக நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்துள்ள படங்களின் பட்டியல்

ஓடிடி

வாத்தி முதல் ஜப்பான் வரை:

வாத்தி: தனுஷ் நடிக்க, வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே மக்களை கவர்ந்துள்ளது. சந்திரமுகி 2: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜிகர்தண்டா 2 : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் ஜிகர்தண்டா 2 படத்தில், SJ சூர்யா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன்: மாரி செல்வராஜின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் மாமன்னன். இதில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது மட்டுமில்லாமல், கார்த்தியின் 'ஜப்பான்', கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா', என பல படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ்.