Page Loader
#SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்
இப்படத்தில் மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

#SK23 : சிவகார்த்திகேயன் - A.R. முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2024
05:58 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சார்ந்த அறிவிப்பை சிவகார்த்திகேயனே சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்திற்கான ஷூட்டிங் நாளை முதல் தொடங்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. முன்னதாக சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்தில் அநேக ஷூட்டிங்கை முடித்து விட்டார் என கூறப்படுகிறது. இந்த SK21 படத்தின் பெயரை, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடவுள்ளனர். அதனை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் தான், தன்னுடைய 23வது படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைகிறார். மறுபுறம், ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்-ஐ இயக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

ட்விட்டர் அஞ்சல்

#SK23