Page Loader
இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா? 
'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 21 அன்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது

இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா? 

எழுதியவர் Arul Jothe
May 23, 2023
06:08 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா 2021 இல், வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் 'மாநாடு' வில்லனாக நடித்தார். தற்போது, 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தமிழ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த செய்தி உண்மையாக இருந்தால், 'மெர்சல்' படத்திற்கு பிறகு விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். SJ சூர்யா இயக்கத்தில் வெளியான 'குஷி' திரைப்படம், இருவரின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் .

Thalapathy 68 

விஜய்யின் 68வது படம்

முன்னதாக விஜய்யின் 68வது படம் அட்லியுடன் இருக்கும் என கூறப்பட்டது, ஆனால் வெங்கட் பிரபுவுடன் தான் இருக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது. மேலும், 'தளபதி 68' படத்தில் விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் சிறப்பான காம்போவை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். விஜய்யும், யுவன் ஷங்கர் ராஜாவும், 'புதிய கீதை' படத்திற்கு பிறகு, 20 வருட இடைவெளிக்குப் பிறகு இணைகின்றனர் இதற்கிடையில், தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.