'I'll save every life I can': ராணுவ வீரர்களின் தீரம் பேசும் அமரன்: ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அமரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இது சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படம். இப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை படம் இதுவாகும்.
அதனால், இப்படத்தில் அவரின் வீர வாழ்க்கை பற்றி காட்சிகள் இடம்பெற்றிருக்கும் எனவும், இது இந்திய ராணுவத்தினரின் வீரத்தை போற்றும் விதமாக இருக்கும் எனவும் ஏற்கனவே கமல் தெரிவித்திருந்தார்.
அதை மேய்ப்படுத்துவது போல, தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில், ராணுவத்தினரின் தீரம் போற்றப்படுகிறது.
இப்படத்தின் இசையில் வெளியான பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகியுள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 31 அன்று வெளியாகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
@APIfilms @homescreenent @actor_nithiin @SreshthMovies @GokulamMovies @GokulamGopalan @DreamBig_film_s @srkrishnamoorty @jsujithnair @PenMovies @5starsenthilk @khanwacky @yorkcinemas @cinema_boleyn @PrimeMediaUS @dmycreationoffl @FilmsForum @ShivAroor @RahulSinghx…
— Raaj Kamal Films International (@RKFI) October 23, 2024