NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு
    இளையராஜா சொன்னதால் நடிக்கவில்லை: பாடகர் மனோ

    இளையராஜாவின் அறிவுரையின் பேரில் நடிப்புக்கு இடைவெளிவிட்டதாக பாடகர் மனோ பேச்சு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2023
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    'மிர்ச்சி' சிவா நடிப்பில், விக்னேஷ் ஷா பி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'.

    இந்த படத்தில், முக்கிய வேடத்தில் பாடகர் மனோ நடித்துள்ளார். படத்தின் ஸ்னீக் பீக் இந்த வாரம் வெளியானது. அதில் மனோவில் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

    இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன், பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (பிப்.,22) நடந்தது.

    அதில், மனோவிடம், படத்தில் நடிப்பதில் இருந்து இடையில் எதற்காக ஒதுங்கி இருந்தார் என கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த மனோ, "'சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை" எனக்கூறினார்.

    மனோ

    சிங்காரவேலன் படப்பிடிப்பு தளத்தில் நடந்தவைகளை பகிர்ந்த மனோ

    தொடர்ந்து இது பற்றி பேசிய மனோ, "தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு, இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்" எனவும் தெரிவித்தார்.

    "சிங்காரவேலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் 15 நிமிடம் தாமதமாக சென்றேன். ஆனால் எனக்கு முன்னதாகவே கமல் வந்துவிட்டார். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு 1/2மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் 1/2மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுவேன்" எனக்கூறினார் மனோ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கோலிவுட்

    'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் இயக்குனர் ரத்னகுமார் பொழுதுபோக்கு
    பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள் மோகன் ஜி
    காதலர் தினம் 2023: ஜோடியாக கண்டுகளிக்க சில எவெர்க்ரீன் காதல் படங்களின் பட்டியல் காதலர் தினம்
    மாடல் நடிகையுடனான காதலை உறுதி செய்த நடிகர் காளிதாஸ் பொழுதுபோக்கு

    திரைப்பட அறிவிப்பு

    FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம் திரைப்பட துவக்கம்
    'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம் படத்தின் டீசர்
    தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷ்
    பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர் படத்தின் டீசர்

    திரைப்பட வெளியீடு

    590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம் பாலிவுட்
    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கோலிவுட்
    கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம், 400 திரையரங்குகளில் வெளியாகப்போகிறது என அறிவிப்பு கோலிவுட்
    சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025