பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன் ஹிந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகர் என உங்களுக்கு தெரியுமா?
பிரபல பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன். இவர் பாலிவுட்டில் நுழைந்துள்ளார். இவரது பெயர் கரண் ஹரிஹரன். இவர் 2016 ஆம் ஆண்டு 'மிஸ்ஸிங் ஆன் எ வீக்கெண்ட்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். தற்போது முழு நேர நடிகராக, 'பியார் ஹை தொ ஹா' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இவரின் படத்தின் ட்ரைலரை வெளியிட்டது பாலிவுட்டின் பிதாமகர் அமிதாப் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது. கரண் ஹரிஹரனுக்கு சிறு வயது முதல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததாம். அதற்கு வித்திட்டது அவரின் தந்தையும் பாடகருமான ஹரிஹரன்தானம். காரணம், ஹரிஹரனின் மியூசிக் வீடியோக்களில் சிறு வயதில் நடித்துள்ளார் கரண்.
நடிப்பில் பட்டம் பெற்ற கரண் ஹரிஹரன்
நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், தன்னுடைய பள்ளி படிப்பு முடிவடைந்ததும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று, நடிப்பு சம்மந்தமான பட்ட படிப்பை படித்துள்ளார், கரண். அதுமட்டுமின்றி, அவரின் தந்தையை போல இசையும் கற்றுக்கொண்டுள்ளார் கரண். அதனுடன், பியானோ மற்றும் கிட்டார் வாசிக்கவும் தெரியுமாம். சின்ன வயதில் 120-115 கிலோ எடையுடன் இருந்தாராம் கரண். ஆனால், நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும், 2 ஆண்டுகளில் அதை குறைத்து, தற்போது சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இவரின் இந்த புதிய படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது