Page Loader
முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ
இதற்காக ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர், Thug Life படக்குழுவினர்

முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2024
12:11 pm

செய்தி முன்னோட்டம்

ஏற்கனவே நமது வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தது போல, கமல்ஹாசன் நடிக்கும், Thug Life திரைப்படத்தில், சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கால்ஷீட் பிரச்னை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறியதாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைவதாக பல நாட்களாக செய்திகள் கசிந்தன. அதை இன்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். அதேபோல, ஜெயம் ரவி கதாபாத்திரத்தில், அசோக் செல்வன் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கிவரும் இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்கிறார்.

embed

தக் லைஃப் அப்டேட் 

Confirmed - #AshokSelvan will be replacing the #Jayamravi's role in #Thuglife ✅💫 A Promising role for the emerging star AshokSelvan in the Pan Indian biggie💥 pic.twitter.com/OqRwSG6m7q— AmuthaBharathi (@CinemaWithAB) May 8, 2024

embed

Thug Life படத்தில் சிம்பு

How is #SilambarasanTR 's #ThugLife Glimpse ? pic.twitter.com/aKHRDjaqxe— Let's X OTT GLOBAL (@LetsXOtt) May 8, 2024