LOADING...
STR - வெற்றிமாறன் இணையும் 'STR 49'-க்கு 'அரசன்' எனப் பெயரிடப்பட்டது! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
'அரசன்' மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

STR - வெற்றிமாறன் இணையும் 'STR 49'-க்கு 'அரசன்' எனப் பெயரிடப்பட்டது! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2025
09:19 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை 'STR 49' என்று குறிப்பிடப்பட்டு வந்த இத்திரைப்படத்திற்கு, தற்போது 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு, 'அரசன்' படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சிலம்பரசன் இரத்தத்தால் நனைந்த சட்டையுடன் காட்சியளிக்கிறார். அவர் கையில் கத்தியை ஏந்தி, ஒரு சைக்கிளுக்கு அருகில் நிற்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

வட சென்னை

'வட சென்னை' யூனிவெர்சின் ஒரு பகுதி

வெற்றிமாறன் ஏற்கெனவே கூறியது போல, 'அரசன்' திரைப்படம் 'வட சென்னை யூனிவெர்சின்' ஒரு பகுதியாக இருக்கும். 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'வட சென்னை' படத்திற்காக வெற்றிமாறன் முதலில் எழுதிய திரைக்கதையின் ஒரு பகுதியை சிம்புவை நாயகனாக கொண்டு இப்படத்தில் பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். 'அரசன்' படத்தில் வடசென்னையில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் எனவும் அவர் கூறினார். அதனால், இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களோடு நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் போன்ற புதுமுகங்களும் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.