Loading...
சிம்பு வெற்றிமாறனின் அரசன் பட தீபாவளி சர்ப்ரைஸ்: 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் ரிலீஸ்?
சிம்புவின் அரசன் படத்தின் 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் வெளியாக உள்ளதாக தகவல்

சிம்பு வெற்றிமாறனின் அரசன் பட தீபாவளி சர்ப்ரைஸ்: 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் ரிலீஸ்?

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் முதல்முறையாகக் கைகோர்த்துள்ள 'அரசன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக சுமார் 8 நிமிடங்கள் கொண்ட பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்கத்தில் 2026 தீபாவளிக்கு திட்டமிடப்பட்டு, பின்னர் 2027 பொங்கல் வெளியீட்டிலிருந்தும் தள்ளிவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையவுள்ளது.

தி வேர்ல்டு ஆஃப் அரசன்

8 நிமிட மிரட்டல் காட்சிகள்

படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்து ஏற்கனவே மனம் திறந்திருந்த சிலம்பரசன், "இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாதவர்; கதையின் பிரம்மாண்ட தன்மைக்கு ஏற்ப முழுமையான உழைப்பைக் கொடுக்கக் கூடுதல் காலம் தேவைப்படுகிறது" என்று விளக்கியிருந்தார்.

அதேநேரத்தில் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க, 'தி வேர்ல்டு ஆஃப் அரசன்' (The World of Arasan) என்ற தலைப்பில் பிரத்யேக முன்னோட்டம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த 8 நிமிடக் காட்சியில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம், சிம்புவின் தோற்றங்கள் மற்றும் இதுவரை படமாக்கப்பட்ட விறுவிறுப்பான பகுதிகள் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

வடசென்னை பிரபஞ்சம் மற்றும் புதிய அப்டேட்

வெற்றிமாறனின் கல்ட் கிளாசிக் திரைப்படமான 'வடசென்னை' உலகத்துடன் தொடர்புடைய கதையம்சத்தைக் கொண்டுள்ள 'அரசன்' திரைப்படத்தில், சிலம்பரசன் தனது இளமைப் பருவம் முதல் முதிய தோற்றம் வரை பல்வேறு காலகட்டங்களில் வாழும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், அமீர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் முன்னோட்டத்தோடு சேர்த்து, சிலம்பரசன் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளித் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சிம்பு ரசிகர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT