Page Loader
ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் புதிய ப்ராஜெக்ட் இதுதான்
'Inimel Delulu is the New Solulu' என தலைப்பிட்டு வெளியான அந்த அறிவிப்பில், ஸ்ருதி மற்றும் லோகேஷ் இடம்பிடித்திருந்தனர்

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் புதிய ப்ராஜெக்ட் இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2024
06:07 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள புதிய ப்ராஜெக்ட் ஒன்றை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 'Inimel Delulu is the New Solulu' என தலைப்பிட்டு வெளியான அந்த அறிவிப்பில், ஸ்ருதி மற்றும் லோகேஷ் இடம்பிடித்திருந்தனர். எனினும் அது புதிய படமா என்பது தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர். இந்த நிலையில் விகடனில் வெளியான செய்திப்படி, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ள புகைப்படம், ஓர் இசை ஆல்பத்துக்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டராகும். சமீபத்தில் துபாயில் நடந்த விருது விழா ஒன்றில், கமல்ஹாசன்,"ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து புதிய இசை படைப்பு ஒன்றில் பணியாற்றவிருப்பதாக" தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பே இந்த ஆல்பம்.

ட்விட்டர் அஞ்சல்

இசை ஆல்பம்