LOADING...
4 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

4 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

எழுதியவர் Sindhuja SM
Apr 27, 2024
06:57 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. "கடந்த மாதம் அவர்கள் பிரிந்தனர். தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததால், அவர்கள் நட்புடன் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்" என்று அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பாலோ செய்வதை சமீபத்தில் நிறுத்தினர். அதனையடுத்து அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் வெளிவந்தன. ஸ்ருதி ஹாசனிடம் இது குறித்து கேட்ட போது, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். மேலும், "என்னை மன்னிக்கவும். நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை." என்று சாந்தனு ஹசாரிகாவும் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஸ்ருதி 

நான்கு வருடங்களாக காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசனும் சாந்தனு ஹசாரிகாவும் சுமார் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சாந்தனு ஹசாரிகா என்பவர் ஒரு டூடுல் கலைஞர் ஆவார். 2019ஆம் அவர்களது உறவு தொடங்கியதில் விருது வழங்கும் விழாக்களுக்கு அவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி சென்றிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அவர்கள் இருவரும் அவ்வப்போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்ட் செய்வதும் வழக்கமாகியது. இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பாலோ செய்வதை சமீபத்தில் நிறுத்தினர். தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்த சாந்தனு ஹசாரிகாவின் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் டெலீட் செய்தார். இந்நிலையில், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்தி உண்மை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.