Page Loader
ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

அட்லீ இயக்கத்தில், பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையில், இப்படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அனிருத் குரலில் ஒலித்த அந்த பாடல், ஏற்கனவே பிரபலமாகி வந்த நேரத்தில், அந்த பாடலின் மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் சென்ற வாரம் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று 'ஜவான்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. 'ஹையோடா' எனத்துவங்கும் இந்த பாடலையும் அனிருத் பாடியுள்ளார். உடன் பிரியா மாலி பாடியிருக்கிறார். விவேக் பாடலை எழுதியுள்ளார். நயன்தாரா, ஷாருக் இருவரும் நடனமாடியுள்ள இந்த மெலடி பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஃபரா கான்.

ட்விட்டர் அஞ்சல்

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல்