
லோகார்னோ திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த மதிப்புமிக்க லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய நடிகர் ஷாருக்கான் பெற்றார்.
இதன் மூலம், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெற்றுள்ளார். விருது விழாவில் அவர் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
விருதுக்கு நன்றி தெரிவித்து பேசிய நடிகர் ஷாருக்கான், "சினிமா நமது காலத்தில் மிகவும் ஆழமான மற்றும் செல்வாக்கு மிக்க கலை ஊடகமாக உள்ளது என்று நான் நம்புகிறேன்.
பல ஆண்டுகளாக இதில் ஒரு பகுதியாக இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த பயணம் எனக்கு சில பாடங்களைக் கற்றுக் கொடுத்தது." என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
லோகார்னோ திரைப்பட விழா
King Khan comes to town. Shah Rukh Khan (@iamsrk) at the 77th edition of the Locarno Film Festival for our Pardo alla Carriera Ascona-Locarno Tourism.
— Locarno Film Festival (@FilmFestLocarno) August 10, 2024
_
Photo by Davide Padovan, produced in collaboration with BaseCamp Festival#Locarno77 pic.twitter.com/Yu01WaBp6A