Page Loader
கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர் 
ரீலும்(இடது) நிஜமும்(வலது); அன்பே சிவம் படத்தில் இருந்து காட்சிகள்

கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2023
12:52 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற வெள்ளி இரவு (ஜூன் 2) நாட்டையே உலுக்கி, கிட்டத்தட்ட 270 உயிர்களை காவு வாங்கிய கோர ரயில் விபத்து குறித்து முன்னரே காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்டவர் கமல்ஹாசன். தற்போது, அவரது ரசிகர்கள் அந்த குறிப்பிட்ட படத்தின் காட்சிகளை வைரலாகி வருகின்றனர். ஆம், கமல்ஹாசன், மாதவன் இருவரும் நடித்து, சுந்தர்.சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது! இந்த திரைப்படத்திலும், இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவிலிருந்து கிளம்பி, சென்னை நோக்கி வரும்போது, விபத்து ஏற்பட்டு பலர் இறப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். காயம் அடைந்தவர்களுக்கு உதவ பல இளைஞர்கள் ரத்ததானம் செய்யவும் முன்வருவது போல அமைந்திருக்கும். நிஜத்திலும் அதேபோல பாலசோர் கிராமத்து இளைஞர்கள் பலரும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

அன்பே சிவம் படக்காட்சி