நடிகர் சத்யராஜின் 'ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகியோர் இணைந்து நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஜாக்சன் துரை'.
இப்படம் காமெடி-ஹாரர் கதையம்சத்தை கொண்டு வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் பி.வி.தரணிதரன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் 2ம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் சத்யராஜ், சிபிராஜ், சம்யுக்தா, சரத் ரவி, மனிஷா ஐயர் உள்பட பலர் நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 1940ம் ஆண்டு நடந்த சம்பவத்தினை கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக தெரிகிறது.
எனவே, பிரிட்டிஷ் காலத்திலிருந்த கட்டிடங்கள், பொருட்கள் போல் செட் அமைக்கவுள்ளனராம்.
இதனிடையே தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
JACKSON - The Monster 🔥
— Sathish Kumar M (@sathishmsk) August 3, 2023
JACKSON DURAI
The Second Chapter
A P.V.Dharanidharan Film
Produced by
Sri Green Productions
I Dream Studios@Sibi_sathyaraj#Sathyaraj@samyukthavv@Dharanidharanpv@SriGreen_Offl#IdreamStudios@Manishaganesh03#siddarthvipin@vikramkally @cheps911… pic.twitter.com/eloZc9BiHr