
அதுதான் அமர்க்களம்; பத்ம பூஷன் விருது வாங்கும் அஜித் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குனர் சரண்
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித்குமார் பத்ம பூஷன் விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ள நிலையில், அஜித், ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் சரண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமர்க்களம் படத்திற்கு முன்னதாக, முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்திற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அப்போது இயக்குனர் சரண் அவரைக் காண மருத்துவமனை சென்ற நிலையில், தனது முதுகுத்தண்டின் ஒரு சிறு பகுதி பாட்டிலில் இருக்க, அதை கண்ணால் சுட்டிக்காட்டி, "அட்டகாசமா ஒரு ஆக்ஷன் கதை ரெடி பண்ணுங்க ஜி நான் ரெடி" என அஜித் தெரிவித்ததாக, சரண் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இயக்குனர் சரணின் எக்ஸ் தள பதிவு
அப்பல்லோ - அறுவைச் சிகிச்சை முடிந்து கழுத்துக்கு கீழ் உடல் மரத்தவராக படுக்கையில் அஜித்! முதுகுத்தண்டின் ஒரு சிறு பகுதி பாட்டிலில் இருக்க அதை என்னிடம் கண்ணால் சுட்டிக்காட்டி , " அட்டகாசமா ஒரு ஆக்ஷன் கதை ரெடி பண்ணுங்க ஜி நான் ரெடி" என்கிறார். அதுதான் அஜித்,அதுதான் அமர்க்களம் ! pic.twitter.com/o1zEL4GJmb
— SARAN (@dirsaran) April 28, 2025