Page Loader
DD Next Level படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 26 வெளியாகிறது; பாடலாசிரியராக மாறிய ஆர்யா

DD Next Level படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 26 வெளியாகிறது; பாடலாசிரியராக மாறிய ஆர்யா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2025
05:35 pm

செய்தி முன்னோட்டம்

சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ஹிட் ஆனது. இந்த நிலையில், தற்போது DD Next Level என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து, படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கும் DD Next லெவல் படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டவர்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தினை ஆர்யா தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மேலும் சுவாரசியமாக இப்பாடலை எழுதி இருப்பதும் ஆர்யா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post