Page Loader
ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா?
Jailer 2 தற்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா?

எழுதியவர் Venkatalakshmi V
May 29, 2025
06:42 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் காம்பினேஷனில் வெளியான 'ஜெயிலர்' உலகளவில் சுமார் ₹700 கோடி வசூலித்தது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓர் பெரிய அப்டேட்டாக ரஜினியுடன், சந்தானம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் கேரளாவில் இரண்டு முக்கிய படப்பிடிப்பு ஷெட்யூல் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கும் வில்லனுக்கும் இடையிலான தீவிரமான சண்டைக்காட்சிகள் இடம்பெறும்.

நட்சத்திரங்கள்

'ஜெயிலர் 2' படத்தில் நாகார்ஜுனா நடிக்க வாய்ப்பு!

இன்று இணையத்தில் வைரலாக தகவல்படி, நாகார்ஜுனா ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, ​​அவர் ரஜினிகாந்துடன் இணைந்து 'கூலி' படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாக உள்ளது. இது செய்தி உறுதியானால், இது ரஜினிகாந்த் படத்தில் நாகார்ஜுனா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இணைவதை குறிக்கும். அதோடு இது இப்படத்திற்கு பான்-இந்தியா ஈர்ப்பை அதிகரிக்கும். ஜெயிலர் முதல் பாகத்தில் மலையாள நடிகர் டி.கே. விநாயகன் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம்

'ஜெயிலர் 2' படத்தில் சந்தானம் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்?

ஃபிலிமிபீட்டின் அறிக்கையின்படி , சந்தானமும் ஜெயிலர் 2 இல் இணைவார். ஒரு வெற்றிகரமான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, அவர் நகைச்சுவை வேடங்களுக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், தற்போது STR 49 படத்தில் அவர் மீண்டும் சிம்புவுடன், நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே ஜெயிலர் 2 படத்திலும் அவர் இணையவுள்ளார் எனக்கூறப்படுகிறது. 'எந்திரன்' படத்திற்கு பின்னர் அவர் ரஜினியுடன் இணைவது இந்த படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.