Page Loader
ஹீரோயினாக களமிறங்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்
வீரப்பனின் மகளான விஜயலக்ஷ்மி அறிமுகமாகும் புதிய படம்

ஹீரோயினாக களமிறங்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த சந்தனமர கடத்தல்காரரான வீரப்பனின் மகள்,விஜயலக்ஷ்மி, தற்போது ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 'மாவீரன் பிள்ளை' எனப்பெயரிடப்பட்ட அந்த படத்தின் இயக்குனர் கேஎன் ஆர் ராஜா. அவர்தான் படத்தின் நாயகனும் கூட. இதை படத்தின் விழாமேடையில் பேசிய விஜயலக்ஷ்மி, "சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டுமென ஆர்வம் இருந்தது". "சமூகத்தை ஒரு பக்கம் குடியும், மறுபக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என கருதினேன்.அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். தனிப்பட்ட ஒழுக்கத்தோடு வாழ்ந்தவர் என் அப்பா. அவரை போலவே நானும், ஒழுக்கத்தை கடைபிடித்து, அவர் பெயரை காப்பாற்றுவேன்" எனக்கூறியுள்ளார் விஜயலக்ஷ்மி.

ட்விட்டர் அஞ்சல்

'மாவீரன் பிள்ளை' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா