அடுத்த செய்திக் கட்டுரை

"எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 15, 2023
05:14 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த நடிகை சமந்தா ரூத் பிரபு, அந்த நோயை கண்டறிந்த பிறகு, தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றிய விரிவான இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், தான் தினசரி கடவுளை வேண்டிக்கொண்டதாகவும், வரங்களுக்காகவோ, கோரிக்கைகளுக்காகவோ அல்ல எனவும், இந்த நோயையும் வாழ்க்கையையும் எதிர்த்து போராட மனதைரியத்தை தர வேண்டும் என்று தான் கேட்டதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும், "எல்லா நேரத்திலும் எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆண்டு. முக்கியமாக, அது நடக்காமல் போனாலும் பரவாயில்லை" என தத்துவார்த்தமாக கருத்து பதிவிட்டுள்ளார் சமந்தா.
சமந்தா தற்போது 'சிட்டாடல்' தொடரின் ஷூட்டிங்கிற்காக செர்பியா நாட்டில் முகாமிட்டுள்ளார்.