Page Loader
சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 'நீதா லுல்லா'க்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது! 
நீதா லுல்லா 'சாகுந்தலம்' படத்திற்காக கேன்ஸில் விருது வென்றார்

சாகுந்தலம் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 'நீதா லுல்லா'க்கு கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது! 

எழுதியவர் Arul Jothe
May 30, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், சமந்தா நடிப்பில், குணசேகரின் இயக்கத்தில் வெளியான புராண காதல் கதையான 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நீதா லுல்லா கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார். 'சாகுந்தலம்' படத்தில் அவர் பணியாற்றியதற்காக அவருக்கு "சிறந்த ஆடை வடிவமைப்பாளர்" விருது வழங்கப்பட்டது. அவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் பணியாற்றியுள்ளார். 1985 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு பிரபலங்களுக்கான திருமண ஆடைகளை வடிவமைப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். பிரபல இந்திய திரைப்படங்களான 'பாலகந்தர்வா' (2012), 'ஜோதா அக்பர்' (2009), மற்றும் 'தேவதாஸ் (2002) போன்ற படங்களுக்கான ஆடை வடிவமைப்பில், தேசிய விருதுகளைப் பெற்றவர்.

Cannes Awards 

சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரான நீதா லுல்லா

காளிதாசனின் பிரபலமான நாடகமான 'அபிஞான சாகுந்தலம்' அடிப்படையாக வைத்து குணசேகர் 'சாகுந்தலம்' எழுதி இயக்கினார். இப்படத்தில் சமந்தா, 'சகுந்தலா' என்ற பெயரிலான பாத்திரத்தில் நடித்தார். தேவ் மோகன், புரு வம்சத்தின் துஷ்யந்தனாக நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, சமந்தாவுக்கு அணிவிக்கபட்ட ஆடையில் இருந்த பூக்களால் தோல் அலர்ஜி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பூவின் அச்சு அவரது கை முழுவதும் இருந்ததாக சமந்தா பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்காக நீத்தா லுல்லா மிகவும் மெனக்கெட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் எனினும் சாகுந்தலம் திரைப்படம், வணிக ரீதியாக தோல்வியடைந்ததற்காக கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.