Page Loader
திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா
நாகசைதன்யா-சமந்தா இருவரும் 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

திருமண முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா

எழுதியவர் Srinath r
Nov 09, 2023
12:16 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் கணவரை பிரிந்ததற்கு பின், முதல்முறையாக தனது திருமணம் குறித்து நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார். ஹார்பர்ஸ் பஜார் நிறுவனத்திடம் சமந்தா பேசியபோது அவரிடம், அவருடைய ரசிகர்கள் அவரது உயர்வு மற்றும் தாழ்வுகளில் ஒரு பகுதியாக இருப்பதை அவர் உறுதி செய்தாரா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சமந்தா, "தோல்வியுற்ற திருமணம், உடல்நிலை மற்றும் வேலை பாதிக்கப்பட்டபோது, நான் எப்போதும் இல்லாத அளவிற்கு தாழ்வாக உணர்ந்தேன்" என தெரிவித்தார்.

2nd card

மோசமான தருணங்களில் இருந்து மீண்டு வர போராடிய சமந்தா

மேலும் பேசியவர், "உங்களுக்குத் தெரியும், என்னை விட குறைவான பிரச்சனைகளை இரண்டு வருடத்திற்குள்ளாக சந்தித்த பலரும் உடைந்து போவார்கள்" "நான் அந்த நேரத்தில், உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து மீண்டு வந்த நடிகர்கள், ட்ரோலிங், பதட்டத்தை அனுபவித்த நடிகர்களைப் பற்றி அதிகம் படித்தேன்." "அவர்களின் கதைகளைப் படித்தது எனக்கு உதவியது. அவர்கள் அதைச் செய்தால், என்னால் முடியும் என்பதை உணர்த்தியது. எனக்கு பலத்தை அளித்தது." "என் மோசமான தருணங்கள் இவ்வளவு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவதை பற்றி நான் கவலைப்படவில்லை. அது என்னை பலம் பெறச்செய்கிறது" "நான் என்னிடம் இருக்கும் அனைத்தையும் வைத்து போராடுவேன் என்பது எனக்கு தெரியும்" என சமந்தா ரூத் பிரபு பேசினார்.