மார்வெல்ஸ் உடன் இணைகிறாரா சமந்தா? இணையத்தில் கசிந்த புது தகவல்
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்னர், அமேசான் நிறுவன தயாரிப்பில் சிட்டாடெல் என்ற வலைத்தொடரில் நடித்து முடித்துள்ளார். அதன்பின்னர், சிறிதுகாலம் தனது உடல்நிலையில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்த சமந்தா, வெளிநாடுகளுக்கு சென்று, தன்னுடைய உடல்ஆரோக்கியத்திற்கு சிகிச்சை மேற்கொண்டார் எனக்கூறப்பட்டது. சிட்டாடெல் சீரீஸை தொடர்ந்து அவர், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், தற்போது சமந்தா, ஹாலிவுட் படமான 'மிஸ்.மார்வெல்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழா சார்ந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இந்த மார்வெல் படத்தில் தெலுங்கு பதிப்பிற்கு சமந்தாதான் டப்பிங் பேசியுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் இது சார்ந்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.