பூத சுத்தி விவாகம் செய்த நடிகை சமந்தா- இயக்குனர் ராஜ் நிடிமொரு; அப்படியென்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா மற்றும் திரைப்பட இயக்குனர் ராஜ் நிடிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி சன்னதியில் 'பூத சுத்தி விவாகம்' என்ற யோக திருமண சடங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாயின. அதன் பின்னர் இணையத்தில் இந்த திருமண முறை குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் தேடி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கான விடை இதோ:
பூத சுத்தி விவாகம்
பூத சுத்தி விவாகம் என்றால் என்ன?
'பூத சுத்தி விவாகம்' என்பது ஈஷா யோகா மையத்தால் வழங்கப்படும் மூன்று புனித திருமண சடங்குகளில் ஒன்றாகும். 'சுத்தி' என்றால் சுத்திகரிப்பு என்றும், 'பூதங்கள்' என்றால் மூலக்கூறுகள் (Elements) என்றும் பொருள். இந்தச் சடங்கின் மையக் கருத்து, கணவன்-மனைவிக்கு இடையே உணர்வு, மனம் மற்றும் உடல் நிலைகளைத் தாண்டி, ஆழ்ந்த மூலக்கூறு பிணைப்பை (Elemental Bond) உருவாக்குவதாகும். திருமணம் செய்யும் தம்பதியினரின் உடலிலும், அவர்களின் உறவிலும் உள்ள ஐந்து மூலக்கூறுகளை அதாவது, நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றைச் சுத்திகரிப்பதே இந்தச் சடங்கின் முக்கிய நோக்கம் ஆகும். லிங்க பைரவியின் அருளை வேண்டி, தம்பதிகள் இணக்கத்துடனும், செழிப்புடனும், ஆன்மீக ஒருமைப்பாட்டுடனும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இந்தச் சடங்கு உதவுகிறது.
முக்கியத்துவம்
லிங்க பைரவி சன்னதியின் முக்கியத்துவம்
இந்த சடங்கு பெரும்பாலும் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி சன்னதியில் நடத்தப்படுகிறது. லிங்க பைரவி என்பது சக்திவாய்ந்த மற்றும் கருணையுள்ள தெய்வீக பெண்மையின் (Divine Feminine) வடிவமாகும். இது சத்குருவால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவமாகும். இங்கு நடத்தப்படும் சடங்குகள், தம்பதியினரின் உடல், மனம் மற்றும் ஆற்றலை நிலைப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நடைமுறைகள்
சடங்கின் நடைமுறைகள்
'பூத சுத்தி விவாகம்' சடங்கின் போது, தம்பதியினர் புனிதமான திருமணத் தீயை சுற்றி வருகின்றனர். இதுவே மூலக்கூறு சுத்திகரிப்பு மற்றும் ஒருமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இது மிகவும் தனித்துவமான மற்றும் நெருக்கமான சடங்காகக் கருதப்படுகிறது. இந்த சடங்கு, மணமகள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் செய்யப்பட மாட்டாது. திருமண உறுதிமொழிகளைப் புதுப்பிக்க விரும்பும் தம்பதிகளுக்கும் இதே விதி பொருந்தும். ஈஷா யோகா மையத்தில் 'பூத சுத்தி விவாகம்' தவிர, 'லிங்க பைரவி விவாகம்' மற்றும் 'விவாக வைபவா' ஆகிய மேலும் இரண்டு புனித திருமண சடங்குகளும் வழங்கப்படுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Love in the air 😍
— Bollywood Buzz (@BollyTellyBuzz) December 2, 2025
.
.#SamanthaRuthPrabhu #RajNidimoru pic.twitter.com/Z40VSSDtTd