டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது
சமந்தாவின் 'யசோதா' படம் நவம்பர் 11-அன்று திரை அரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் டப்பிங் செய்யப்பட்டு தெலுங்கு-ல் வெளியானது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். இப்படத்தின் இயக்குனர் ஹரி- ஹரிஷ் ஆவர். இவர் ஏற்கனவே தமிழில் ஓர் இரவு, அம்புலி, ஆ மற்றும் ஜம்புலிங்கம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை எம். சுகுமார் மற்றும் மார்த்தாண்டன் கே. வெங்கடேஷ் ஆகியோர் கையாண்டுள்ளனர்.
சமந்தாவின் யசோதா அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. யசோதா கலவையான விமர்சனங்களைப் பெற்றுந்தாலும் சமந்தாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. இதில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். அதிநவீன வசதிகள் வழங்குவதற்கு பின்னால் ஏதோ குற்றம் இருக்கிறது என்று கதை செல்கிறது. யசோதா சமந்தாவின் கேரியரில் ஒரு முக்கியமான படமாகும். ஏனெனில் சமந்தா பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படம், தி ஃபேமிலி மேன் சீசன் 2 க்குப் பிறகு சமந்தாவின் இரண்டாவது ஆக்ஷன் சார்ந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியான ஒரு மாதத்துக்குப் பின்னர், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், டிசம்பர் 9-அன்று வெளியாகிறது.