Page Loader
'கைதி'க்கு பின்னர் சர்தார் 2-வில் கார்த்தியுடன் இணையும் சாம் சி.எஸ்

'கைதி'க்கு பின்னர் சர்தார் 2-வில் கார்த்தியுடன் இணையும் சாம் சி.எஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2025
05:06 pm

செய்தி முன்னோட்டம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'சர்தார் 2' படத்தின் டீஸர் இன்று வெளியானது. இப்படத்தில் 'கைதி' படத்திற்கு பின்னர் கார்த்தியுடன் இணைகிறார் சாம் .சி.எஸ். சர்தார் முதல் பாகத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு துவங்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளதாகவும், படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. ​ இப்படத்தில் மேலும், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ராஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் பலர்​ நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ்​ நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் 'சர்தார் 2' படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.