LOADING...
கல்கி 2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி ஒப்பந்தம்: உறுதி செய்த தயாரிப்பு தரப்பு
கல்கி 2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி ஒப்பந்தம்

கல்கி 2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி ஒப்பந்தம்: உறுதி செய்த தயாரிப்பு தரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2026
02:53 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதலாம் பாகத்தில் 'சுமதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தீபிகா படுகோன் நீக்கப்பட்டதால் அந்த கதாபாத்திரம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அவருக்குப் பதில் நடிகை சாய் பல்லவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது. "தீபிகா வெளியேறிய பிறகு அந்தத் தூணான கதாபாத்திரத்தைத் தவிர்க்க முடியாது. எனவே, அதற்குப் பொருத்தமான சாய் பல்லவியை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்," என்று படக்குழுவினர் உறுதிப்படுத்தியதாக அந்த செய்தி கூறியது.

வெளியேற்றம்

தீபிகாவின் நிபந்தனைகள் தயாரிப்பு தரப்பிற்கு ஏற்புடையதாக இல்லை என நீக்கம்

தீபிகா படுகோன் நீக்கப்பட்டதற்குப் பின்னால் இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் பாகத்தை விட 35% கூடுதல் சம்பளம் கேட்டதாகவும், அதனை வழங்கத் தயாரிப்பு நிறுவனம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல, ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என்ற நிபந்தனையை அவர் விதித்ததாகவும், 'கல்கி' போன்ற பிரம்மாண்ட படத்திற்கு அது செட் ஆகாது என தயாரிப்பு தரப்பு கருதியதாகவும் கூறப்பட்டது. தனது நீக்கம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய தீபிகா, "சம்பளம் மற்றும் பணிச் சூழல் தொடர்பான போராட்டங்களை நான் எப்போதும் அமைதியாகவும் கண்ணியமாகவும் எதிர்கொள்பவள். சில நேரங்களில் அவை பொதுவெளியில் பேசப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது," என்று மறைமுகமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement