LOADING...
சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த தமிழ் படம் எது தெரியுமா? அவரே கூறிய பதில் இதோ!
சமீபத்தில் '3BHK' திரைப்படத்தை பார்த்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்

சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த தமிழ் படம் எது தெரியுமா? அவரே கூறிய பதில் இதோ!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 26, 2025
01:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் ரெட்டிட் (Reddit) இணைய தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, தான் பார்த்து ரசித்த தமிழ் திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சமீபத்தில் '3BHK' என்ற தமிழ் திரைப்படத்தை பார்த்ததாகவும், அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், தனது உணர்வுகளை நெருக்கமாக தொட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். இதே போல, மராத்தி மொழி திரைப்படமான 'Ata Thambaycha Naay' படமும் தன்னை ஈர்த்ததாகவும் கூறியுள்ளார். "நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல திரைப்படங்களை ரசிக்க விரும்புகிறேன்," என சச்சின் தெரிவித்துள்ளார்.

பதில்

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நெகிழ்ச்சி

சச்சின் பாராட்டிய செய்தியை அறிந்த '3BHK' திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ், X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் தனது நன்றி தெரிவித்து,"நன்றி சச்சின் சார்... உங்கள் பாராட்டு எங்கள் படத்திற்கு பெரும் அங்கீகாரம்" என்றும் பதிவு செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஷாந்தி டாக்கீஸின் அருண் விஸ்வாவும் X தளத்தில்,"பல முறை டைப் செய்தேன், ஆனால் இன்னும் வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை! நான் சரியான வார்த்தையை கண்டுபிடித்து பின்னர் மீண்டும் கூறுவேன்!!!!!! ஏனென்றால் என் கற்பனைக்கு எட்டாத ஒன்றை நான் இப்போதுதான் பார்த்தேன்!" என பரவசத்துடன் சச்சினின் பதிவை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post