Page Loader
மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்! KGF பாணியில் தயாராகிறதா?
இதற்கான அறிவிப்பை படத்தயாரிப்பு குழு அறிவித்துள்ளது

மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்! KGF பாணியில் தயாராகிறதா?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2025
12:53 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் இணைந்த இந்த கூட்டணி, தற்போது ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை படத்தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான சமீபத்தில் வெளியான 'விடுதலை பாகம் 2' படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்துள்ளது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக அவர்கள் தயாரிப்பிலேயே வெற்றிமாறன் இன்னொரு படம் இயக்கவுள்ளார் என்றும், அதேபோல சூரி நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் தயாராகும் ஒரு படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது என அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த படம்?

தனுஷ்- வெற்றிமாறன் இணையவுள்ள இந்த படம், இயக்குனர் வெற்றிமாறனின் 9வது படமாகும். இந்த கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது. குறிப்பாக ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட தரமான படங்களுக்கு ஐந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அதில் குறிப்பாக ஆடுகளம் மட்டுமே 6 தேசிய விருதுகளை குவித்தது. தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்று தந்ததும் வெற்றிமாறனின் படைப்புகளே. இந்த நிலையில் இந்த இருவர் கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த படம் KGF பாணியில் இருக்கும் என சமீபத்தில் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தாண்டி அவர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தினையும் இயக்கவுள்ளார். இந்த செய்தி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.