Page Loader
உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர் 
திடீரென நோய் வந்ததால் தான் மெலிந்து போனேன்: மவுனம் களைத்த ரோபோ சங்கர்

உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர் 

எழுதியவர் Arul Jothe
Jun 12, 2023
03:51 pm

செய்தி முன்னோட்டம்

கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவி ஷோக்களின் மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் கால் பதித்தவர் ரோபோ ஷங்கர். தனது காமெடி திறமை மற்றும் பாடி லாங்குவேஜ் மூலம் மக்களின் மனம் கவர்ந்த காமெடியனாக வலம் வந்தவர் 'ரோபோ' ஷங்கர். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடியனாக, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறந்த முறையில் நடித்து அசத்தி இருப்பார். சமீப காலமாக நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாமல் இருந்த ரோபோ ஷங்கர், சமூக வலைதளை பக்கங்களில் வெளிவரும் புகைப்படங்களில் மிகவும் மெலிந்து காணப்பட்டார். மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ரோபோ ஷங்கரின் உடல் நலன் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.

Robo shankar health update

ரோபோ சங்கர் உடல்நலம் குறித்து மனம் திறந்தார்

பல்வேறு வதந்திகளும் அவரது உடல் குறித்து வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில், தற்போது அவரது உடல் நலம் குறித்து அவரே மனம் திறந்து பேசி உள்ளார். "உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருந்த போது, எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துச்சு. அதனால தான் உடல் எடை வேகமாக குறைந்துவிட்டது." என ரோபோ ஷங்கர் கூறியுள்ளார். மேலும், "நல்ல நேரமாக எனக்கு நல்ல மருத்துவர்கள் அமைஞ்சாங்க. அதனால தான் சீக்கிரமா பழைய நிலைக்கு திரும்ப முடிஞ்சது" என்றும் தெரிவித்துள்ளார். வெளியே செல்லும் போது என்னை பார்ப்பவர்கள், "நீங்க பழையபடி வரணும்ணு" சொல்கிறார்கள் என்றும், மக்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் ரோபோ சங்கர் மனம் நெகிழ்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.