Page Loader
பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது
PS படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பளம்

பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 28, 2023
11:17 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படைப்பாக கருதப்படும் பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. தற்போது வரை, படத்திற்கு பரவலாக நல்ல விமர்சனங்களே வெளியான நிலையில், அந்த படத்தில், பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர், நடிகையரின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை, அமரர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி எழுதி இருந்தார். பல தசாப்தங்களாக, அந்த புத்தகத்தை, திரைப்படமாக மாற்றும் முயற்சியில், திரையுலக ஜாம்பவான்கள் பலரும் முயன்று தோற்று போயினர். இந்நிலையில், அதை தைரியமாக முன்னெடுத்து, செயல்படுத்தி காட்டியவர் இயக்குனர் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

card 2

நடிகர்களுக்கு பல கோடிகளில் சம்பளம் வழங்கி உள்ளது லைகா

ஐஸ்வர்யா ராய்: நந்தினி, ஊமை ராணி என இரு வேடங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.10 கோடி த்ரிஷா: இளையபிராட்டியார் குந்தவை நாச்சியாருக்கு சம்பளம், ரூ.5 கோடி ஐஸ்வர்யா லட்சுமி: பூங்குழலி நடிகைக்கு சம்பளம் ரூ.1 .5 கோடி விக்ரம்: ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெற்றவர் விக்ரம். இவரின் சம்பளம், ரூ.12 கோடி கார்த்தி: இவர் பெற்ற சம்பளம் 5 .5 கோடி ஜெயம் ரவி: படத்தின் நாயகன் அருள்மொழி வர்மனுக்கு, ரூ.8 கோடி ரூபாய் சம்பளம் ஷோபிதா துலிபாலா: வானதிக்கு சம்பளம் 1 கோடி பிரபு, பிரகாஷ் ராஜ்: இவர்கள் இருவருக்கும் தலா 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது