
சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி
செய்தி முன்னோட்டம்
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, நடிகர் சிம்பு நடித்த A1 போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.
இவர் 1977ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார்.
அஜித் குமாரின் 'அவள் வருவாளா'(1998) திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு, சினிமாவில் நடிக்க அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அவருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்த நடிகை சங்கீதா என்பவருக்கும் இன்று சென்னையில் வைத்து திருமணம் நடந்தது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை சங்கீதாவை கரம் பிடித்தார் ரெடின் கிங்ஸ்லி
Redinn Kingsley Tied the Knot with Sangeetha ❤️ @KingsleyReddin #Sangeetha ✨ 💞#ReddinKingsley #Sangeetha #ReddinKingsleyMarriage #ssmusic pic.twitter.com/vCOoLoROti
— SS Music (@SSMusicTweet) December 10, 2023