NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா?
    மாலத்தீவில் விடுமுறையை கழித்த ரஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும்

    விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 07, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை ரஷ்மிகாவிற்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் காதல் என நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காமரேட்' போன்ற படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும் கூறப்பட்டது.

    அதற்கு ஏற்றார் போல, இருவரும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களும் வைரல் ஆனது.

    ஆனால், ரஷ்மிகா ஹிந்தி படவுலகில் கவனம் செலுத்த துவங்கியபோது, இருவருக்கும் பிரேக்-அப் ஆகிவிட்டது என செய்திகள் வந்தன. இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிய நேர்ந்தது எனவும், அதனால்தான், ரஷ்மிகா ஹிந்தி படவுலகிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

    இதற்கிடையில், 'குஷி' என்ற திரைப்படத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் இணைந்து நடிக்கையில், அவருடன் காதலில் விழுந்தார் எனவும் செய்திகள் வெளிவந்தன.

    ரஷ்மிகா

    மீண்டும் துளிர்த்த காதலா?

    இதனிடையே, இரு தினங்களுக்கு முன்னர், ரஷ்மிகாவின் பிறந்தநாளின்போது, அவர் ஒரு வீடியோ பதிவை, தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

    அதில், அவர் கைகளில், பளிச்சென்று ஒரு மோதிரம் இருந்தது.

    அந்த வீடியோ பதிவை தொடர்ந்து ஒரு ஊடகம், ட்விட்டரில், "அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம், விஜய் தேவரகொண்டாவின் விருப்பமான மோதிரம். தற்போது எல்லாம் உறுதியாகி விட்டது. இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கியுள்ளனர். விரைவில் மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்கலாம்" என புகைப்படத்துடன் பதிவிட்டது.

    அதில், ரஷ்மிகாவின் வீடியோவில் இருந்த அறையும், விஜய் தேவரகொண்டாவின் புகைப்படத்தில் இருக்கும் அறையும், ஒரே மாதிரி இருந்தது.

    அந்த ட்விட்டர் பதிவு, வைரலானதை அடுத்து, அதற்கு ரஷ்மிகாவும், "ஐயோ! ரொம்ப யோசிக்காதிங்க தம்பி!" என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா இடையே காதலா?

    #RashmikaMandanna #VijayDeverakonda On Dating It's Clearly Proved... Yes but it was very Seriously 😳 #VijayDevarakonda Favourite Ring 💍 To #Rashmika Figure.. They Both are living in same house same Room.. Surely we can Hear great News 😀 @iamRashmika @TheDeverakonda pic.twitter.com/VotVtLUAr5

    — South Digital Media (@SDM_official1) April 6, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    ரஷ்மிகாவின் பதில்

    Aiyoooo.. don’t over think it babu.. 🤣❤️

    — Rashmika Mandanna (@iamRashmika) April 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது டி20 உலகக்கோப்பை
    சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை பிரதமர் மோடி
    OpenAI செயலிழப்பு: ChatGPT செயலிழப்பு, மொபைல் மற்றும் வலை சேவைகள் பாதிக்கப்பட்டன ஓபன்ஏஐ
    'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    கோலிவுட்

    ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 'ரஜினிகாந்த் அன்பு இல்லம்' கட்டித்தரப்பட்டது ரஜினிகாந்த்
    ஹீரோயினாக களமிறங்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் பொழுதுபோக்கு
    நவீன 'முதல் மரியாதை'; 38 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில்! திரைப்பட வெளியீடு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரலான ட்வீட்
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்

    வைரலான ட்வீட்

    நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி கூறிய அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்
    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி பெண்கள் தினம்
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! ஆட்டோமொபைல்
    ட்விட்டரில் நடைபெறும் பிரியாணி சண்டை: கொல்கத்தா, லக்னோ பிரியாணியை ருசியால் முந்திய திண்டுக்கல் பிரியாணி! வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025