'ஜிமிக்கி பொண்ணு' ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று, 27வது பிறந்தநாள்
செய்தி முன்னோட்டம்
'நேஷனல் க்ரஷ்' என்று அழைக்கப்படும் ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று 27வது பிறந்தநாள்.
குடகு நாட்டில் பிறந்தவர் ரஷ்மிக்கா. பள்ளி படிப்பை கொடகு நாட்டில் முடித்த ரஷ்மிக்கா, கல்லூரி படிப்பிற்க்காக பெங்களூரு வந்தார்.
அங்கு நண்பர்களின் கட்டாயத்தின் பேரில், மாடலிங் மற்றும் அழகி போட்டிக்கு விண்ணப்பித்தவர், சில அழகி பட்டங்களையும் வென்றார். அதனை தொடர்ந்து, கன்னட படமான, கிரிக் பார்ட்டியில், அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் இயக்குனர், கந்தரா என்ற வெற்றி படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி தான்.
அதன் பிறகு ஓரிரு கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர், தெலுங்கு படவுலகில், கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் நுழைந்தார்.
அந்த படமே அவரை இந்தியா முழுக்க பிரபலம் ஆகியது.
ரஷ்மிக்கா
நடனத்தில் கலக்கும் ரஷ்மிக்கா
அதன் பின்னர், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தவரை, 'சுல்தான்' படம் மூலம் தமிழ் படவுலகிற்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.
பின்னர், இசையமைப்பாளர் யுவனுடன் ஒரு மியூசிக் ஆல்பமில் நடித்தார் ரஷ்மிக்கா.
இதனிடையே, சென்ற ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தின் வெற்றி, இவரை மீண்டும் தமிழ் படவுலகிற்கு அழைத்து வந்தது. விஜயுடன் ஜோடி போடும் வாய்ப்பும் கிடைத்தது. 'வாரிசு' படத்தில் அவர் ஆடிய 'ஜிமிக்கி பொண்ணு' என்ற பாடல், டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலம் இன்றளவும் பிரபலமாக உள்ளது.
அதன் விளைவாக, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற IPL 2023 தொடக்க விழாவில், இவரின் நடன நிகழ்ச்சி இடம்பிடித்திருந்தது.