LOADING...
பாக்ஸ் ஆபீஸில் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' வேட்டை! 500 கோடி கிளப்பில் அதிவேகமாக இணைந்து சாதனை
500 கோடி கிளப்பில் அதிவேகமாக இணைந்து 'துரந்தர்' சாதனை

பாக்ஸ் ஆபீஸில் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' வேட்டை! 500 கோடி கிளப்பில் அதிவேகமாக இணைந்து சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2025
11:39 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் திரையுலகமே வியக்கும் வண்ணம் நடிகர் ரன்வீர் சிங்கின் அதிரடி திரைப்படமான 'துரந்தர்' பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திய திரையுலகின் மாபெரும் சாதனையாக கருதப்பட்ட ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தின் வசூல் சாதனையை இப்படம் தகர்த்தெறிந்துள்ளது. இந்திய திரையுலக வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்த திரைப்படம் என்ற பெருமையை 'துரந்தர்' பெற்றுள்ளது. இதற்கு முன் ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் 18 நாட்களில் 500 கோடி வசூலை எட்டியிருந்தது. ஆனால், ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' இந்த மைல்கல்லை அதைவிடக் குறைவான நாட்களிலேயே எட்டிப் பிடித்துள்ளது.

விவரங்கள்

தொடர் தோல்விக்கு பின் ரன்வீர் சிங்கின் வெற்றி

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரன்வீர் சிங்கிற்கு, இந்தப் படம் ஒரு மாபெரும் 'கம்-பேக்' ஆக அமைந்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களின் பட்டியலில் ரன்வீர் சிங் தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் வரவுள்ளதால், வரும் நாட்களில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலைத் தொடும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 'உரி' (Uri) பட புகழ் இயக்குனர் ஆதித்யா தர் மற்றும் ரன்வீர் சிங் முதல்முறையாக இணைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் அர்ஜுன் ராம்பால் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்தது கூடுதல் பலமாக அமைந்தது.

Advertisement