கிராமி விருதுகளை குறிவைக்கும் ரன்வீர் சிங்கின் துரந்தர்: 9 பிரிவுகளில் பாடல்கள் சமர்ப்பிப்பு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் திரைக்கு வந்து உலகளவில் வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge), தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிராமி விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இப்படத்தைத் தயாரித்த டி-சீரிஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள், இசையமைப்பாளர் சாஷ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவான படத்தின் இசைத்தொகுப்பு மற்றும் பாடல்களை கிராமி விருதுப் பரிந்துரைக்காக முறைப்படி அனுப்பி வைத்துள்ளன. இணையத்தில் இதுதொடர்பாகப் பரவி வந்த தகவல்களை டி-சீரிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சிறந்த இசை
கிராமி பரிசீலனையில் இடம்பெற்றுள்ள முக்கியப் பிரிவுகள்
விஷுவல் மீடியாவுக்கான சிறந்த இசைத்தொகுப்பு பிரிவில் ஒட்டுமொத்தப் படத்திற்கான ஆல்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தனிப்பாடல்களாக, ஃபிர் சே பாடல் விஷுவல் மீடியாவுக்கான சிறந்த பாடல் பிரிவிலும், ஜான் சே குஸார்தே ஹை மற்றும் கன்ஹையா ஆகிய பாடல்கள் சிறந்த உலகளாவிய இசைப் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற பஞ்சாபி பாடலின் ரீமேக்கான ஆரி ஆரி பாடல் சிறந்த ஆசிய பாப் இசைப் பிரிவிலும், ஜாஸ்மின் சாண்ட்லாஸ் மற்றும் சத்தீந்தர் சர்தாஜ் பாடிய ஜாயியே சஜ்னா சிறந்த பாப் குழு இசைப் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
கிராமி விருதுக
பல்வேறு ஜானர்களில் அனுப்பப்பட்ட பாடல்கள்
இசைப் பிரிவுகளில் பல்வேறு வகைகளை உள்ளடக்கும் வகையில், டெஸ்டினி - மன் அத்கேயா சிறந்த ராப் பாடல் பிரிவிலும், வாரி ஜாவான் சிறந்த நடனம்/மின்னணு இசைப் பிரிவிலும் , ஹம் பியார் கர்னே வாலே சிறந்த ரீமிக்ஸ் பாடல் பிரிவிலும் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது கிராமி விருதுகளுக்கான முதற்கட்ட பரிசீலனைக்கு சென்றுள்ளது.
தகுதிச் சுற்றுகள் மற்றும் வாக்களிப்பு நடைமுறைகளுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
embed
Twitter Post
DHURANDHAR THE REVENGE for your GRAMMY®️ consideration. Thank you for all the love. Check this link for more details. #ForYourConsideration #Grammys #RecordingAcademy #FYChttps://t.co/wLC07g9Vmo pic.twitter.com/HTt0oh3dLO— T-Series (@TSeries) October 9, 2026