ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' OTT ரிலீஸ் அப்டேட்: ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்போது வெளியாகிறது?
செய்தி முன்னோட்டம்
பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வரும் நடிகர் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், திரையரங்கு வெற்றியை தொடர்ந்து விரைவில் OTT தளத்தில் வெளியாக தயாராகி வருகிறது. 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் ₹150 கோடிக்கு பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தி திரையுலகின் மிகப்பெரிய டிஜிட்டல் டீல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
OTT ரிலீஸ்
OTT ரிலீஸ் தேதி எப்போது?
திரைப்படத் துறையில் நிலவும் தற்போதைய தகவல்களின்படி, 2026 மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் இப்படம் டிஜிட்டலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் சிறப்பாக இருப்பதால், டிஜிட்டல் ரிலீஸை ஒரு சில வாரங்கள் தள்ளி வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ரன்வீர் சிங்கின் அதிரடி நடிப்பில் உருவான இந்தப் படம், அதன் கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான மேக்கிங்கிற்காக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.