Page Loader
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது
'நீ என் உலகம்' பாடல் தந்தை-மகனுக்கு இடையில் உள்ள சிக்கலான உறவை பேசுகிறது.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அனிமல் படத்தின் 'நீ என் உலகம்' பாடல் வெளியானது

எழுதியவர் Srinath r
Nov 14, 2023
05:49 pm

செய்தி முன்னோட்டம்

ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி வரும் அனிமல் படத்தின் மூன்றாவது பாடலான, 'நீ என் உலகம்' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, ஹிந்தியில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக இப்பாடல் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர்- அனில் கபூர் கதாபாத்திரங்களுக்கிடையே இருக்கும், உறவின் பிணைப்பை வெளிப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

2nd card

டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் அனிமல் திரைப்படம்

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹிந்தியில் உருவாகி உள்ள இப்படம், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்படத்தில், தெலுங்கு மொழி பேசும் பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் முதலில், ரஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தில் பரினிதி சோப்ரா நடிப்பதாக இருந்த நிலையில், அவர் வேறு படத்தில் ஒப்பந்தமானதால் இப்படத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அனிமல் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது