தலைவர் 170: மஞ்சு வாரியார், ராணா என ரஜினிகாந்துடன் இணையும் நடிகர் பட்டாளம்
செய்தி முன்னோட்டம்
நேற்று முதல், 'தலைவர் 170'-யில் இணையும் நடிகர்-நடிகையர் பெயர்களை வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம்.
ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தது போல, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
TJ ஞானவேல் இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த இரு தினங்களாக படம் சார்ந்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் இணைவதாக நேற்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர், 'பாகுபலி' புகழ் ராணா டகுபதி இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்துடன் இணையும் ராணா
Welcoming the dapper & supercool talent 😎 Mr. Rana Daggubati ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team has gotten even more charismatic 🌟 with the addition of the dashing @RanaDaggubati 🎬🤗✌🏻@rajinikanth @tjgnan @anirudhofficial @ManjuWarrier4 @officialdushara… pic.twitter.com/XhnDpm27CH
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023