Page Loader
தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?
லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?

தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

இன்று முழுவதும் இணையத்தில் ட்ரெண்டான செய்தி இது தான். விஜய்யின் 'லியோ' படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது. 'விக்ரம்' படத்தில், ரோலெக்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், ஒரு கெஸ்ட் ரோல் செய்திருப்பார் நடிகர் சூர்யா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்திலும் அதே போல ஒரு முக்கிய வேடத்தில், ராம் சரண் நடிக்க போவதாக செய்திகள் உலா வந்தன. இதற்கு காரணமாக அவர்கள் தெரிவிப்பது, லியோ படத்தின் டைட்டில் ட்ரைலரில், தெலங்கானா நம்பர் பிளேட் மாட்டிய ஒரு கார் வருகிறது. இந்த வைரல் செய்தி குறித்து ராம் சரணின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

லியோவில் ராம் சரணா?