சாய்பல்லவி நடிக்கும் ராமாயணம் இரண்டு பாகங்களைக் கொண்ட காவியமாக உருவாகிறது, மூன்று பாகங்கள் அல்ல!
மிகவும் எதிர்பார்க்கப்படும் பாலிவுட் திரைப்படமான ராமாயணம், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட மூன்று பாகங்களுக்கு பதிலாக இரண்டு பகுதியாக வெளியாகும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்குகிறார். இருப்பினும், குறிப்பிட்ட பாகங்கள் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் மும்பையில் தொடங்கியது. ராமாயணத்தை இரண்டு பகுதி கதையாக்க முடிவெடுத்தது திரைக்கதையின் நீளமே காரணமாகும் என்று படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் பிங்க்வில்லாவிடம் கூறினார். "சினிமாவில் பொதுவாக முதல் பாகத்தின் வெற்றியை பொறுத்தே அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிடும் நேரத்தில், இப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்படும்" என்று அந்த அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.
இரண்டு 'ராமாயணம்' பாகங்களுக்கும் 350 நாள் ஷூட்டிங் ஷெட்யூல்
இந்த அறிக்கைபடி,"இரண்டு ராமாயண படங்களுக்கான 350 நாள் படப்பிடிப்பு அட்டவணையை குழு உருவாக்கியுள்ளது". இரண்டு பாகங்களும் ஓராண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 டிசம்பரில் இரண்டு பாகங்களின் முதன்மை படப்பிடிப்பை முடிக்க திவாரி இலக்கு வைத்துள்ளார். நடிகர்களின் தோற்றத்தில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக படப்பிடிப்புடன் ஒரே நேரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பேக்-டு-பேக் வடிவத்தில் தொடரும் என்று கூறப்படுகிறது. ராமாயணம் திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.