இந்தியாவின் ஹை-பட்ஜெட் படமாக தயாராகிறது ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம்
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் இந்து இதிகாசமான ராமாயணத்தை இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பிர் கபூர் மற்றும் சாய் பல்லவி முறையே ராமராகவும், சீதா தேவியாகவும் நடித்துள்ளனர். பிரமிக்க வைக்கும் ₹835 கோடி ($100M) பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த காவியத் தயாரிப்பு, இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த மிகப்பெரிய பட்ஜெட், இப்படத்தின் முதல் பாகத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் ஹங்கமாவின் செய்தி அறிக்கை கூறுகிறது. " ராமாயணம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு உணர்வு. தயாரிப்பாளர்கள் அதை ஒரு உலகளாவிய திரைப்படமாக மாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாக" அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதுவரை அதிக பட்ஜெட் தயாரிப்பில் உருவான இந்தியத் திரைப்படங்கள்
ராமாயணம் இந்தியாவின் "மிகவும் விலையுயர்ந்த திரைப்படம்" என்ற பெருமையை பெற உள்ளது. இதுவரை, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள், பிரபாஸின் ஆதிபுருஷ் (₹600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR, ரஜினிகாந்தின் 2.0, பிரம்மாஸ்திரம்: முதல் பாகம் ஆகியவை ஆகும். ராமாயணம் திரைப்படத்திற்கு 600 நாட்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்காக மட்டுமே தேவைப்படுகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், கைகேயியாக லாரா தத்தா, ஹனுமானாக சன்னி தியோல் மற்றும் மந்தாராவாக ஷீபா சத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், பாபி தியோல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாபி தியோல் கும்பகர்ணன் வேடத்திலும், விஜய் சேதுபதி விபீஷணன் வேடத்திலும் நடிக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது.