'ராமாயணம் பாகம் 1' நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்; புக்கிங் எப்போது துவங்குகிறது ?
செய்தி முன்னோட்டம்
இந்தியக் காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில், "இது ராம யுகத்தின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு இந்த அறிவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தசரா பண்டிகையன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
நட்சத்திரப் பட்டாளம்
வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் முன்னணியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் ராவணனாக நடிகர் யாஷ், அனுமன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ், டிஎன்இஜி மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் வெற்றியாளர்களான ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
மேலும், ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்களான டெர்ரி நோட்டரி மற்றும் கை நோரிஸ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
விநியோகம்
5 மொழிகளில் வெளியீடு
'ராமாயணம் பாகம் 1' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஐமேக்ஸ் உள்ளிட்ட உயர்தர திரையரங்கு வடிவங்களில் உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது.
இந்தியாவின் முக்கிய திரையரங்குகளில் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளன.
முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, இக்கதையின் இரண்டாம் பாகம் 2027 தீபாவளி பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
embed
Twitter Post
On the auspicious occasion of Navratri, we celebrate the beginning of a new era. Yeh Ram ke Yug ka Aarambh hai. 🏹 Namit Malhotra's Ramayana Part 1: In cinemas WORLDWIDE, across all premium formats, from 5th November. Advance bookings open on Dussehra. pic.twitter.com/pKLvArFQCg— The World Of Ramayana (@WorldOfRamayana) October 11, 2026