Loading...
உலகளவில் ரூ.1,790 கோடி வசூல்: பாகுபலி 2 வாழ்நாள் சாதனையை முறியடித்து ராமாயணா புதிய வரலாறு
உலகளவில் ரூ.1,790 கோடி வசூலித்து பாகுபலி 2 சாதனையை 'ராமாயணா' முறியடித்துள்ளது.

உலகளவில் ரூ.1,790 கோடி வசூல்: பாகுபலி 2 வாழ்நாள் சாதனையை முறியடித்து ராமாயணா புதிய வரலாறு

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
04:28 pm

செய்தி முன்னோட்டம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான ராமாயணா (Ramayana) திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் வெளியான 23 நாட்களில் உலகளவில் ரூ. 1,790.10 கோடி வசூலித்துப் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக ரூ. 1,195.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 595 கோடியும் வசூலாகியுள்ள நிலையில், இந்தியாவில் ரூ. 1,000.55 கோடி நிகர வசூலைக் கடந்த நான்காவது இந்தியத் திரைப்படம் மற்றும் இரண்டாவது இந்தித் திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது.

அடுத்த இலக்கு என்ன?

பாகுபலி 2 வாழ்நாள் சாதனை முறியடிப்பு 

இந்த இமாலய வசூலின் மூலம், எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படத்தின் உலகளாவிய வாழ்நாள் வசூலான ரூ. 1,788.06 கோடியை ராமாயணா முறியடித்துள்ளது.

உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் புதிய இடத்தைப் பிடித்துள்ள இப்படம், விரைவில் புஷ்பா 2 படத்தின் வசூலையும் தாண்டி உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் எனத் திரையுலக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT