LOADING...
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2025
12:54 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே படத்தின் முதல் பாடல் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

கூலி படத்தின் விவரங்கள்

ரஜினிகாந்த்-அனிருத் கூட்டணியில் இதுவரை வெளியான 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்' போன்ற படங்களின் பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில்,'கூலி' திரைப்படத்தின் பாடல்களும் அந்த வரிசையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கூலி' திரைப்படம் குறித்து தமிழ் ரசிகர்களிடையே மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement