ரஜினிகாந்த் முதல் ரிஷப் ஷெட்டி வரை: போராடி சாதித்து காட்டிய நடிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல், காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி வரை, தற்போது கோலோச்சி கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும், எந்தவித பின்புலமும் இன்றி, தங்கள் சொந்த முயற்சியாலேயே பெரிதாக சாதித்துள்ளனர். பல போராட்டங்கள், அவமானங்கள் என எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து, தங்கள் தனித்திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அப்படி, பெரும் போராட்டத்திற்கு பிறகு, திரைத்துறையில் சாதித்து காட்டிய நடிகர்கள் சிலர்: ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் திரைப்பயணம், அனைவருக்கும் தெரிந்ததே. கர்நாடகாவில் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து, வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் ரஜினி. அதன் பின்னர், பஸ் கண்டக்டராக பணி புரிந்து கொண்டிருக்கும் போது தான், சென்னைக்கு பயணப்பட்டார். படக்கல்லூரியில் சேர்ந்தார். பாலச்சந்தரின் கண்களில் தென்பட்டார். அதன் பின்னர் நடந்தது அனைத்தும் சரித்திரமே.
சொந்த முயற்சியால், முன்னுக்கு வந்த டாப் நடிகர்கள்
யாஷ்: கன்னட திரைப்பட உலகில் தற்போது டாப் நடிகராக இருக்கும் இவர், KGF திரைப்படத்தின் மூலமாக பேன் இந்தியா நடிகராக வளர்ச்சி அடைந்தார். ஆனால் ஆரம்ப நாட்களில் இவர் மேடை நாடகங்களுக்கு செட் அமைப்பது, நடிகர்களின் அடுத்த காட்சிக்கு ரெடி செய்வது என back-stage பணியாளராக துவங்கினார். விஜய் தேவரகொண்டா: 'கீதா கோவிந்தம்', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் இவர். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்கும் விஜய், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்னர், மியூசிக் வீடியோக்களில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததாக கூறினார். விஜய் சேதுபதி: இவர் குடும்பசூழல் காரணமாக, துபாயில் ஜூனியர் அக்கௌன்டன்ட் பணி செய்து வந்தார்.