
தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல்
செய்தி முன்னோட்டம்
மணிரத்னம் இயக்கத்தில், 1991 -இல் வெளியான படம் தான் 'தளபதி'. ரஜினிகாந்த் முதல்முறையாக மணிரத்தினதுடன் இணைந்த படம் அது.
மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ரஜினியின் கதாபாத்திரம் எனக்கூறுவர்கள்.
ரஜினி-மம்மூட்டியின் நட்பை பற்றியும், அந்த நட்பிற்காக, தன்னுடைய சகோதரனை எதிர்க்கும் ஒரு கதாபாத்திரமாக ரஜினி ஜொலித்திருப்பார்.
அந்த படத்தின் பிரிமியர் காட்சிக்கு தனிப்பட்ட முறையில் வரவேற்கும் கடிதம், தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
அது வைரலானதற்கு காரணம், அந்த கடிதத்தை எழுதி இருப்பது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தன் கைப்பட அந்த கடிதத்தை, தன்னுடைய லெட்டர்பேட்டில் எழுதி இருக்கிறார். அதில், ப்ரியமிர் காட்சி, அக்டோபர் 4-ஆம் தேதி, சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினி லெட்டர்
Gold :: Super Stars Personal Hand Written Invite for Thalabathy Premier#Superstar pic.twitter.com/tMvsobZNL8
— Dharma Chandru (@dharmachandru) March 21, 2023