ஜெயிலர் படத்தின் காட்சிகள் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று வெளியாக இருக்கிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று, திரைத்துறையினர் மற்றும் அவரின் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை வெளிப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் பாபா படத்தை மறு வெளியீடு செய்து ரசிகர்களிடையே கொண்டாடப் பட்டத்தை அடுத்து 'ஜெயிலர் படத்தை பற்றிய 'அப்டேட்' அதிகார பூர்வமான ட்விட்டர் பதிவு வெளியாகி உள்ளதை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் எழுதி இயக்கி உள்ளார் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன். மற்றும் இப்படம் அதிரடி- நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், இவருடன் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் விநாயகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப் படத்தின் ஒரு காட்சி இன்று வெளியாகிறாதா?
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் 'தலைவர் 169' என்ற தலைப்பில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியானது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் அப்டேட்டை ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று கலாநிதி மாறனின் 'சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதன்படி "12.12.22 - 6 PM முத்துபாண்டியன் வருகிறார்" எனவும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலரின் ஒரு காட்சி வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.