விஜய்யின் 'லியோ' சாதனையை வெறும் 7 நாட்களில் தவிடுபொடியாக்கிய ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருவதுடன், அண்டை மாநிலமான கேரளாவிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே கேரளாவில் வசூலை அள்ளியது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ரஜினிக்கு உள்ள பலத்த வரவேற்பின் காரணமாக முதல் நாளில் ரூ.12 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், தற்போது வெறும் 7 நாட்களின் முடிவில் ரூ.60 கோடியைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லியோ
லியோ படத்தின் சாதனையை முறியடித்த ஜெயிலர் 2
கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் கேரளாவில் சுமார் ரூ.59.65 கோடி வசூலித்து இதுவரை முன்னணியில் இருந்தது.
பல மாதங்களாக தொடர்ந்த இந்த சாதனையை தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் வெறும் 7 நாட்களில் முறியடித்து, கேரளாவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியும், ரஜினிகாந்தின் திரையாளுமையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கின.
மேலும், கேரளாவில் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரைகளில் 4,000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதே இந்த சாதனைக்கு முக்கியக் காரணமாகும்.