Page Loader
நடிகர் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ராகவா லாரன்ஸ்

நடிகர் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ராகவா லாரன்ஸ்

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2024
06:57 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவிலில் இருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தாய் ஷோபா சந்திரசேகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னையில் புதிதாக அவர் ஒரு சாய்பாபா கோவிலை கட்டியுள்ளார். இந்த செய்தியை உறுதிப்படுத்திய ஷோபா சந்திரசேகர், தனது மகன் தனது கனவை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். சென்னையில் தனது தாயாருக்கு விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு தற்போது ராகவா லாரன்ஸ் சென்றுள்ளார். ராகவா லாரன்ஸ் சாய்பாபா கோவிலுக்கு சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரையும் அவர் சந்தித்து பேசினார்.

ட்விட்டர் அஞ்சல்

சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ராகவா லாரன்ஸ்